×

தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

அம்பத்தூர்: சக மாணவனுடன் பழகியதை தாய் கண்டித்ததால், மாணவி தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர், மேனாம்பேடு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் அருண்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகள் நிவேதா (17). இவள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வந்தாள். நிவேதா, தன்னுடன் படிக்கும் சகமாணவனுடன் அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். மேலும், ஒருவருக்கு ஒருவர் செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதனை தாய் தனலட்சுமி கண்டித்துள்ளார். இந்நிலையில் தாய் தந்தை வெளியில் சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த நிவேதா, படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த தனலட்சுமி மகளைமீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள் நிவேதா, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Netaji Street ,Menampedu ,Ambattur ,
× RELATED பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில்...