×

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வாயை துணியால் அமுக்கி நகை பறிப்பு

ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூர் அடுத்த பாக்கம் நத்தம்பேடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராணி (75). இவர் தனது மகன் ஞானசேகருடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஞானசேகரன் குடும்பத்துடன் திருநின்றவூரில் உள்ள பெருமாள் கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டார்.  ராணி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். காற்றுக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து தூங்கியுள்ளார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் அவரது வீட்டுக்குள் இரண்டு மர்ம நபருக்கு மேல் புகுந்துள்ளனர். ஒருவன் மூதாட்டி ராணியின் வாயை துணியால் அமுக்கியுள்ளளான். மற்றொருவன் மூதாட்டி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியை உள்பட 2 சவரன் நகைளை பறித்துள்ளார். பின்னர் மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன்பிறகு மூதாட்டியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, லேசான காயத்துடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சை முடிந்து மூதாட்டி வீடு திரும்பினார். புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வாயை துணியால் அமுக்கி நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Rani ,Bhakkam Nathampedu Main Road ,Thiruninnavur ,Gnanasekar ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்