×

ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு: 4 ரவுடிகளுக்கு வலை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே சீமாபுரம் டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் விஷ்ணுநாத் (30) தூங்கியுள்ளார். அவரை 4 ரவுடிகள் அடித்து உதைத்து செல்போன் பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டனர். அதே பகுதியில் ஓட்டல் நடத்தும் வழுதிகைமேடு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் வீரராகவன் (60) பைக்கில் வந்துள்ளார். அவரையும் ஆட்டோவில் வந்த 4 ரவுடிகள், வீரராகவனின் செல்போனை பறிக்க முயற்சித்தது. இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஓட்டல் உரிமையாளர் வீரராகவனை ரவுடி கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிவிட்டது. பின்னர் இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 ரவுடிகளை வலைவீசி தேடுகின்றனர்….

The post ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு: 4 ரவுடிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Vishnunath ,Seemapuram Tolgate ,Meenchur ,4 Routies Web ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...