×

நகை கடன் தள்ளுபடி சான்றுகள், நகைகள் வழங்கும் விழா: பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் ஒன்றியம், திருவூர் ஊராட்சியில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் 28 பயனாளிகளுக்கு நகை தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை உரிய  பயனாளிகளிடம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி நகை தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை உரிய  பயனாளிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் த.எத்திராஜ், ஆசிரியர் சா.அருணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.திலீப்ராஜ், வ.ஹரி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.அபினேஷ், வங்கி செயலாளர் ஏழுமலை, திமுக நிர்வாகிகள் ராஜேஷ், வெங்கடேசன், தாமரை செல்வன், நாகராஜ், காஜா, சுபாஷ், அன்பு, சுந்தர், சசி, கோபி, வினோத்குமார், சிபி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நகை கடன் தள்ளுபடி சான்றுகள், நகைகள் வழங்கும் விழா: பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Poontamalli Constituency ,Tiruvallur ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dairy Minister ,Avadi S.M. Nasser ,Tiruvallur Union ,Tiruvur ,Panchayat ,
× RELATED சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை...