×

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி மேல்பட்டி பொண்ணப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் அமுதா(55). இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு வியாசர்பாடி எம்கேபி நகர் 12வது தெருவை சேர்ந்த அன்பழகன்(59) மற்றும் அவரது மனைவி முனியம்மா(55) ஆகியோர் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறினர். அதன்பேரில் அமுதா ரூ.9 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை அவர்களுக்கு தெரிந்த வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த முருகம்மாள் மற்றும்  புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 4 ஆண்டுகளாகியும் வீடு கிடைக்கவில்லை. இதனால் இதுகுறித்து அமுதா, அன்பழகன் மற்றும் முனியம்மாவிடம் கேட்டள்ளார். அதன்பேரில் அன்பழகனின் நண்பரான செல்வநாதன் குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்படும் ஒப்புதல் ஆணையை வழங்கியுள்ளார். அதை கொண்டு வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு சென்று அமுதா பார்த்தபோது அந்த வீட்டில் வேறு ஒருவர் வசித்து வந்ததும், அவருக்கு வழங்கப்பட்ட ஆவணம் போலியான ஆவணம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி போலீசார், மோசடியில் ஈடுபட்ட முனியம்மா அன்பழகன், முருகம்மாள், செல்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் செல்வநாதன் மீது ஏற்கனவே புது வண்ணாரப்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது….

The post குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Amutha ,Vyasarbadi Malbatti Ponnapan Street ,Vyasarbadi MKB Nagar ,Dinakaraan ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்