×

கடத்தூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவு-மூட்டை ₹17 ஆயிரத்திற்கு விற்பனை

கடத்தூர் : கடத்தூரில் வெற்றிலை விலை ₹17 ஆயிரமாக சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில், வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு அஸ்தகிரியூர், முத்தனூர், நல்லகுட்லஹல்லி, ஐயம்பட்டி , காவேரிபுரம், வேப்பிலைப்பட்டி, கேத்து ரெட்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.நேற்று நடந்த சந்தையில் ஒரு மூட்டை வெற்றியிலை ₹17000க்கு விற்பனையானது. சென்ற வாரம் ஒரு மூட்டை வெற்றிலை ₹20 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் மூட்டைக்கு ₹3 ஆயிரம் விலை சரிந்தததால் விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர்….

The post கடத்தூர் பகுதியில் வெற்றிலை விலை சரிவு-மூட்டை ₹17 ஆயிரத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Betel ,Kaduur ,Kadoor ,Dharmapuri district ,
× RELATED அரசு பஸ் கண்ணாடி உடைந்தது