×

செய்யாறு அருகே துணிகரம் துணிக்கடையில் ₹90 ஆயிரம் கம்ப்யூட்டர் திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலை

செய்யாறு :  செய்யாறு அருகே துணிக்கடையில் ₹90 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர், கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் 2வது புதுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(61). இவர் வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் எதிரே துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி இரவு வியாபாரம் முடித்துக்கொண்டு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பணம் வைக்கும் பெட்டிகளும் திறக்கப்பட்டு அதிலிருந்த ₹90 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதேபோல் கடையில் இருந்த கணினி, கேமராக்கள், கேமரா பதிவு செய்யும் கருவி ஆகியவையும் திருட்டு போயிருந்தது. துணிக்கடையின் மேல்மாடி பகுதி மற்றும் பின்புற பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அங்கிருந்த ெபாருட்களை கொண்டு மர்ம ஆசாமிகள், கடையின் பின்புற கிரில் ேகட்டை உடைத்து கடைக்குள் நுழைந்து பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து துணிக்கடையில் பணம் மற்றும் கம்ப்யூட்டரை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும், திருட்டு நடந்த கடையில் திருவண்ணாமலையில் இருந்து தடயவியல் நிபுணர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post செய்யாறு அருகே துணிகரம் துணிக்கடையில் ₹90 ஆயிரம் கம்ப்யூட்டர் திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Vadhakaram ,Seiyaru ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...