×

பர்வத மலையில் மர்ம ஆசாமிகள் தீவைப்பு; மூலிகை செடிகள், மரங்கள் கருகி சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் அங்குள்ள மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதமானது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை உள்ளது. இம்லையில் பாலாம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள மலை ஏறும் வழியில் ஏராளமான மூலிகைச்செடிகள், அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இதனால் இந்த மலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்ம ஆசாமிகள் சிலர், மலையில் உள்ள செடிகள், மரங்களை அடிக்கடி தீயிட்டு அழிக்கின்றனர். அதேபோல் நேற்றும் மர்ம ஆசாமிகள் பர்வதமலையில் உள்ள செடிகள், மரங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அவை தீப்பிடித்து எரிந்து சேதமானது. புனிதமான பர்வத மலையில் தீ வைத்து எரிப்பது, விலங்குளை வேட்டையாடுவது என சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வனத்துறையின் அலட்சியத்தால் இவை தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை தடுத்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பர்வத மலையில் மர்ம ஆசாமிகள் தீவைப்பு; மூலிகை செடிகள், மரங்கள் கருகி சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Parvata Hill ,Kalasapakkam ,Parvatha mountain ,Dinakaran ,
× RELATED கலசப்பாக்கம் அருகே பரபரப்பு...