×

ஜெயலலிதாவின் வீட்டு சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் மறைவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நீண்ட காலமாக சமையலராக பணியாற்றி வந்தவர் ராஜம்மாள்(78). ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றவர். வயதுமூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், நேற்று மாலை ராஜம்மாள் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல், ராஜம்மாள் மறைவுக்கு அதிமுக வெளியிட்ட இரங்கல் செய்தி: ஜெயலலிதாவின் உதவியாளராகவும், நம்பிக்கைக்குரிய தோழமையாகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் தோட்ட வேதா நிலையத்திலேயே தங்கி பணிவிடைபுரிந்த ராஜம்மாள் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்….

The post ஜெயலலிதாவின் வீட்டு சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் மறைவு appeared first on Dinakaran.

Tags : Rajammal ,Jayalalithaa ,CHENNAI ,chief minister ,Boise Estate ,Jayalalitha ,
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்