×

தமிழுக்கு வருகிறார் குஷி கபூர்

சென்னை: தமிழ் படத்தில் தேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை தேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர். இளைய மகள் குஷி கபூர் ஜோயா அக்தரின் ‘ஆர்ச்சீஸ்’ இந்தி படம் மூலம் நடிகையாகியிருக்கிறார். ஜான்வி கபூரை தமிழில் நடிக்க வைக்க பலர் முயன்றனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் பையா 2 படத்தில் குஷி கபூர் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை போனி கபூர் மறுத்தார்.

இப்போது தமிழில் குஷி கபூர் நடிக்கும் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை ஆகாஷ் என்ற புது இயக்குனர் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கஉள்ளார். இந்தப் படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக அதர்வா நடிக்கிறார்.

The post தமிழுக்கு வருகிறார் குஷி கபூர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Khushi Kapoor ,Chennai ,Devi ,Janhvi Kapoor ,Zoya Akhtar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்...