×

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பைனலுக்கு சிந்து, பிரணாய் தகுதி

பாசெல்: சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில், இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்குடன் மோதினார். இதில் சிந்து 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் இறுதிபோட்டியில், தாய்லாந்தின், பூசனன் ஓங்பாம்ருங்பனுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், இந்தியாவின் பிரணாய், 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில், இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாஜின்டிங்கை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில், கிராம்பி ஸ்ரீகாந்தை 18-21, 21-7, 21-13 என இந்தோனேசியாவின் ஜோனதான் கிறிஸ்டியிடம்தோல்வி அடைந்தார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி- பிரனாயுடன் மோதுகின்றனர். அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில், ரஷ்யாவின் வேரா ஸ்வேனரேவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்….

The post சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பைனலுக்கு சிந்து, பிரணாய் தகுதி appeared first on Dinakaran.

Tags : Swiss Open badminton ,Sindhu ,Prenai ,Basel ,Switzerland Open ,Basel City ,Women's Singles Semifinals ,India ,Pranai ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....