×

சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு

சென்னை: நடிகர்கள் சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது. சிம்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் தொகை தர வேண்டி இருப்பதாகவும் அதை பலமுறை கேட்டும் அவர் தராததால் அவருக்கு ரெட் கார்டு விதிப்பதாக சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இதேபோல், விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் அதர்வா பதிலளிக்கவில்லை. அவருக்கும் ரெட் கார்டு வழங்குவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த சங்க கூட்டத்திலும் இவர்களுக்கு ரெட் கார்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Vishal ,Atharva ,CHENNAI ,Tamil Film Producers Association ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!