×

2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்…9 இடங்களை கூடுதலாக உருவாக்க அண்ணா பல்கலை. கோரிக்கை

சென்னை: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கான, மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது என தெரிவித்து இருந்தனர். அதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரச்சனையில் தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இருந்தனர். இந்தநிலையில் எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்துள்ளது.  …

The post 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்…9 இடங்களை கூடுதலாக உருவாக்க அண்ணா பல்கலை. கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : 2 M. Tech ,University ,Chennai ,Anna University ,2 M.Tech ,Dinakaran ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா