×

வெயில் தாக்கம் அதிகரிப்பு வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யம் : வெயில் தாக்கம் அதிகரிப்பால் வேதாரண்யத்தில் 9ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தப்பி இருமுறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது.இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9ஆயிரம் ஏக்கரிலும் முழுவீச்சில் உற்பத்தியை துவங்கி உள்ளனர். இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டு இலக்கை எட்ட தொழிலாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்….

The post வெயில் தாக்கம் அதிகரிப்பு வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vedaranayam ,Vedaranyam ,Nagai District Vetaranthayam ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...