×

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ்

பெங்களூரு: கன்னட ஹீரோவான யஷ், கேஜிஎஃப் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக புகழ் பெற்றார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ படங்கள் யஷ்ஷை வட இந்தியாவிலும் பிரபலமாக்கியது. 2018ம் ஆண்டு யஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேஜிஎஃப்’ கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. இந்த படத்துக்கு பிறகு யஷ் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டது. இதனால் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள பல பெரிய இயக்குனர்களிடம் யஷ் கதை கேட்டு வந்தார். இதில் அவருக்கு எந்த கதையும் திருப்தி தரவில்லை. கேஜிஎஃப் படங்களால் கிடைத்த புகழை தக்க வைக்கும் வகையில் ஒரு படத்துக்காக அவர் காத்திருந்தார்.

தற்போது பிரபல மலையாள பெண் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லையர்ஸ் டைஸ்’, ‘மூத்தோன்’ படங்களை இயக்கிய கீது மோகன் தாஸ்தான் அவர். கீது இயக்க உள்ள பான் இந்தியா படத்தில் யஷ் நடிக்க இருக்கிறார். இது யஷ்ஷின் 19வது படமாக வெளிவர உள்ளது. சத்யராஜ் நடித்திருந்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள கீது மோகன் தாஸ் ‘லையர்ஸ் டைஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற கீது மோகன் தாஸ், இப்போது ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.

The post கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yash ,Keetu Mohandas ,Bengaluru ,India ,Prashant Neil ,North India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமூக வலைத்தளத்தில் காரசாரம்: அல்லு அர்ஜுன், யஷ் ரசிகர்கள் மோதல்