×

சித்திரை திருவிழா உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, சித்திரை மாதத்தின் 11வது நாள் நடப்பது வழக்கம். இந்த திருவிழா கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டநிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவிழா  நடப்பதற்கான ஏற்பாடுகள் குறித்த உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று வேதகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், கோயில் மேலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 11 நாள் உபயதாரர்கள் கலந்து கொண்டு தனித்தனியாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.    …

The post சித்திரை திருவிழா உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chitra Festival ,Thirukkalukkunram ,Vedakriswarar temple ,Thirukkalukukunram ,Chitrai ,Chitrai Festival ,
× RELATED சமூகவலை தள பக்கத்தில் வைரல் சாலையில்...