×

ஜென்டில்மேன் 2ம் பாகத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி

சென்னை: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியாளர் ஷங்கர் இயக்குனராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். அர்ஜூன், மதுபாலா, எம்.என்.நம்பியார், கவுண்டமணி, செந்தில், மனோரமா, சுபா நடித்த இப்படம் கடந்த 1993ல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். பிரபுதேவா, கவுதமி இணைந்த ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், பல்வேறு பிரச்னைகளால் கடந்த சில வருடங்களாக எந்த படமும் தயாரிக்கவில்லை. தற்போது மீண்டும் வந்துள்ள அவர், ஜென்டில்மேன் 2ம் பாகம் உருவாக்குவதாக அறிவித்துள்ளார். பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி இசை அமைக்கிறார். ஹீரோயினாக மலையாள நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், ஜென்டில்மேன் 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். …

The post ஜென்டில்மேன் 2ம் பாகத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி appeared first on Dinakaran.

Tags : Nayantara Sakravarthy ,S. PA chandrasekaran ,shankar ,Arjun ,Madhubala ,M. N.N. Namiyar ,Kondamani ,Senthil ,Manorama ,Nayantara chakravarthy ,
× RELATED சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து...