×

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு எப்படி டெலிவரி செய்ய முடியும் சுமோட்டோவிடம் விளக்கம் கேட்கிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்: ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரிக்க முடிவு

சென்னை: ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது பொதுமக்களுக்கு பல சலுகைகள் அளித்துள்ளது. அதில் ஒன்று தான் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என்றும், அதற்காக சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி அந்த நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் டிவிட்டர் பக்கத்தில் அது எப்படி சாத்தியம், தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலில் எப்படி முடியும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்று பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த நிறுவனம் சில பொருட்களுக்கு மட்டும் அது பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கிடையே சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி எப்படி 10 நிமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்ய முடியும். சாலை விபத்துக்கள் நடக்க வழிவகுக்குமே என்றும், ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுமோட்டோ நிறுவனத்திற்கு மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கப்பட உள்ளதா கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்த உள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனத்தை இயக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கி வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று  அறிவித்துள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து போலீசார் கருதுகின்றனர். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான வழிமுறைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு எப்படி டெலிவரி செய்ய முடியும் சுமோட்டோவிடம் விளக்கம் கேட்கிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்: ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Sumoto ,Chennai City Transport Police ,Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...