×

நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தர்ணா

புதுச்சேரி :  புதுச்சேரி, திருக்கனூர் அடுத்த தேத்தாம்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி.  விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளது.  இந்த இடத்தை  தேத்தாம்பாக்கத்தில் வசிக்கும் அரசு ஊழியரான ராமமூர்த்தி என்பவர் சிலருடன்  சேர்ந்து போலி ஆவணங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதை  சபாபதி தட்டிக் கேட்டுள்ளார். ஆக்கிரமிப்பு இடத்தை ஒப்படைக்க மறுத்ததால்  இன்று குடும்பத்துடன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி, வழுதாவூர் ரோட்டில் உள்ள  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்கு நுழைவு வாயில்  முன்பு மனைவி சுசீலா மற்றும் மகன், மகள், உறவினர்களுடன் தரையில் அமர்ந்து  தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோரிமேடு போலீசார்  அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது இடத்தை  ஆக்கிரமித்துள்ள ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பதோடு, அங்கு நாங்கள்  வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து சபாபதியையும், அவரது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்திய  போலீசார், பேச்சுவார்த்தைக்காக அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். இதில்  தனக்கு நியாயம் கிடைக்காவிடில் குடும்பத்துடன் மீண்டும் இங்குவந்து  தீக்குளிக்கப் போவதாக சபாபதி வேதனைப்பட தெரிவித்தார். …

The post நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Puducherry ,Sabapathy ,Mariamman Koil Street, Tirukanur ,Thethambakkam, Puducherry ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...