×

வெங்கல் அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 14வயது சிறுமிகள் இருவர் மாயம்; காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: வெங்கல் அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 14வயது சிறுமிகள் இருவர் மாயம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர்களான மோனிஷா(14) கீர்த்தனா(14) ஆகியோர் அலமாதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்துள்ளதால் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து பள்ளி சீருடையில் சென்றுள்ளனர். மாலை வரை வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து  வெங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளின் பெற்றோர், அரசு பள்ளி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post வெங்கல் அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற 14வயது சிறுமிகள் இருவர் மாயம்; காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : wengal ,Thiruvallur ,Vengal ,Thiruvallur District ,Newupupam ,Venkel ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...