×

மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பு முதல் குமணன்சாவடி சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்: ஆவடி காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் திட்ட பணிகள் காரணமாக போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பு முதல், குமணன்சாவடி சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் வெளியிட்ட  அறிக்கை: மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பில் இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக இன்று முதல் மே 19ம் தேதி வரை இரவு 11 மணி முதல் 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுள்ளது. அதன்படி போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜிப், ஆட்டோ. மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன்,டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும். போரூரில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு – பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம்- வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல்மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும். பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். மேலும் ஆலோசனைகளை ஆவடி போக்குவரத்து காவல் உதவி ஆணையரின் 8056217958 எண்ணிற்கும்,  எஸ்ஆர்எம்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டரின் 9498141613 எண்ணிற்கும், ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாடு அறையின் 7305715666 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளவும்….

The post மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பு முதல் குமணன்சாவடி சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்: ஆவடி காவல் ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Borur Lake Shiva Temple ,Gumanzavadi ,Metro ,Awadi Guard ,Chennai ,Metro Railway ,Kumanzavadi ,Metro Rail ,Awadi Guilder ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...