×

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய், சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி படிப்பு முடித்த பிறகு கனடா சென்ற இவர், அங்கு திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் சினிமா டெக்னிக்கல் தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பிறகு ஆங்கிலத்தில் குறும்படங்களையும் இயக்கினார். ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயது முதலே டைரக்‌ஷன் ஆசை இருந்தது. அவர் வளர்ந்ததும் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார்.

இதனிடையே தனது விருப்பப்படியே டைரக்‌ஷன் துறையை தேர்வு செய்திருக்கிறார் ஜேசன். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை கதை, திரைக்கதை எழுதி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசை அமைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனிருத் இசை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anirudh ,Vijay ,Jason Sanjay ,Chennai ,Sangeeta ,Canada ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்