×

ஆகஸ்ட் 15ல் இந்தியன் 2

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட இந்த படத்திற்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே ரஜினியின் ’தலைவர் 170’ சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 21’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட 10 மாத காலங்கள் ஆகும் என்பதால் தான் ஆகஸ்ட் 15ம் தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன், விவேக், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், கர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

The post ஆகஸ்ட் 15ல் இந்தியன் 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Laika ,Kamalhaasan ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த...