×

புனித் ராஜ்குமார் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். இந்த படம் சமீபத்தில் வெளியானது. புனித்தின் கடைசி படம் என்பதால் சென்டிமென்ட்டாக அவரது ரசிகர்கள் இந்த படத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். பேமிலி ஆடியன்சும் இந்த படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். கர்நாடகத்தில் பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை நீக்கிவிட்டு, காஷ்மீர் பைல்ஸ் இந்தி படத்தை திரையிடும்படி, தியேட்டர்களுக்கு பாஜவினர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘ஜேம்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா என்னை சந்தித்தார். அப்போது பாஜ எம்எல்ஏ ஒருவரும், அந்த கட்சியினரும் ஜேம்ஸ் படத்தை திரையிடுவதை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்தனர் என புகார் கூறினார்’ என்றார். இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்துள்ளது….

The post புனித் ராஜ்குமார் படத்தை திரையிட பாஜ எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : baja ,bangaluru ,james ,rajkumar ,karnataka ,saint ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...