×

ஐஐடி வளாகத்தில் இறந்த 3 புள்ளி மான்களின் மரணம் ஆந்த்ராக்ஸ் நோயால் ஏற்படவில்லை: முதன்மை தலைமை வன பாதுகாவலர் தகவல்

சென்னை: முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, ஐஐடி வளாகத்தில் சுமார் 400 புள்ளிமான்கள் உள்ளன. கடந்த 17ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் 3 புள்ளிமான்கள் இறந்ததாக சென்னை, வன உயிரின காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, சென்னை ஐஐடி வளாகத்தில் புள்ளிமான்கள் இறப்பு நிகழும் போது எல்லாம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒரேநாளில் மூன்று புள்ளிமான்கள் இறந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன், சென்னை, வன உயிரின காப்பாளர் முன்னிலையில் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் உடற்கூறு சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் ரத்தம் மற்றும் சதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மத்திய ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவு அறிக்கை கடந்த 22ம் தேதி கிடைத்தது. அந்த அறிக்கையின்படி ரத்தம் மற்றும் சதை மாதிரிகளில் ஆந்த்ராக்ஸ் கிருமியின் தொற்று ஏதுமில்லை என கண்டறியப்பட்டது. எனவே இந்த மூன்று புள்ளி மான்களின் மரணம் ஆந்த்ராக்ஸ் நோயினால் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post ஐஐடி வளாகத்தில் இறந்த 3 புள்ளி மான்களின் மரணம் ஆந்த்ராக்ஸ் நோயால் ஏற்படவில்லை: முதன்மை தலைமை வன பாதுகாவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : IIT ,Principal Chief Conservator of Forests ,CHENNAI ,Chief Conservator of Wildlife ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ...