×

ஆக்‌ஷன் விருந்து படைக்கும் லாரன்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தில் கேங்ஸ்டர் பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் திரைப்படம் எடுத்த நிலையில் இந்த படத்தில் கேங்ஸ்டர் ராகவா லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுக்கும் கதையம்சம் கொண்டது என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தின் கதை கடந்த 1975ஆம் ஆண்டு நடப்பதாகவும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஆக்‌ஷன் விருந்து படைக்கும் லாரன்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lawrence ,Karthik Subbaraj ,SJ Surya ,Raghava Lawrence ,Jigarthanda ,Diwali ,Kollywood Images ,
× RELATED எனது படங்களை தொடர்ந்து பாராட்டும்...