×

தேன்கனிக்கோட்டை அருகே நள்ளிரவு பரபரப்பு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்சிலேயே பிரசவம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த போலாக்கொல்லை மலைகிராமத்தில் வசிப்பவர் கூலித்தொழிலாளி பசவராஜ்(30). இவரது மனைவி பசவராணி(23), நிறைமாத கர்ப்பிணி. கடந்த 20ம்தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியில் அய்யூர் வனத்துறை சோதனை சாவடிக்கு சில கிலோ மீட்டர் முன்பாக, 12 யானைகள் கூட்டமாக ஆம்புலன்சை மறித்தபடி நின்றன. அதிர்ச்சியடைந்த டிரைவர், நடுகாட்டில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து வனத்துறையினர் வந்து, சாலையில் கூட்டமாக நின்றிருந்த யானைகளை விரட்டினர். பின்னர் யானைகள் தானாக காட்டிற்குள் சென்றுவிட்டன. இந்த நேரத்தில் பசவராணிக்கு பிரசவ வலி அதிகமானதுடன், ஆம்புலன்சிலேயே பெண் குழந்தையும் பிறந்தது. பின்னர் தாய், சேயை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்….

The post தேன்கனிக்கோட்டை அருகே நள்ளிரவு பரபரப்பு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்சிலேயே பிரசவம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Basavaraj ,Polakollai hill village ,Krishnagiri district ,Basavarani ,
× RELATED மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது