×

பெண் கேரக்டரில் யோகிபாபு

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று ’மிஸ் மேகி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படப்பிடிப்பின் கடைசி நாளில் படக்குழுவினர் அனைவரும் பிரியாணி தயார் செய்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.இந்த படத்தில் யோகி பாபு, ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா நடிப்பில் உருவாகிய இந்த படத்தை லதா மணியரசு என்பவர் இயக்கியுள்ளார். கார்த்திக் இசையில், கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக் ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது.

The post பெண் கேரக்டரில் யோகிபாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yokibabu ,Yogi Babu ,Yogi ,Yogibabu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குய்கோ விமர்சனம்