×

வாலிபருக்கு குண்டாஸ்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அபி (எ) அபிமன்யு(28). இவர் தொடர் அடிதடி வழக்கில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவரை மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர் மீது அடிதடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே மப்பேடு காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளது. எனவே தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் அபிமன்யுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அபிமன்யுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்….

The post வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Thiruvallur ,Abhimanyu ,Periya Street ,Kadambathur Union ,Narasinghapuram Village ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!!