×

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.50 அதிகரிப்பு: ரூ.1,000ஐ நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி; 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது

சென்னை: உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டரும் ரூ.50 உயர்ந்து ரூ.1,000ஐ நெருங்கியுள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கடந்த ஆண்டு விறு விறுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக லிட்டர் ரூ.110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பதவியேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இதனால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100க்குள் வந்தது. ஆனால், ஒன்றிய அரசு தொடர்ந்து விலையை உயர்த்தியதால், பெட்ேரால் விலை மீண்டும் ரூ.100ஐ கடந்தது. இதனிடையே,  கடந்த நவம்பர் மாதத்தில், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான தனது கலால் வரியை குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10ம் குறைந்தது.இதனிடையே, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக, பெட்ேரால், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்பட்டது. சேலத்தை பொறுத்தவரை, பெட்ரோல் ரூ.101.72ம், டீசல் ரூ.91.77 என்ற அடிப்படையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.இதனிடையே, ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிரடியாக உயர்ந்தது. அதேசமயம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு எந்நேரமும், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், எதிர்பார்த்தபடி 137 நாட்களுக்கு பிறகு நேற்று, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 76 காசு உயர்த்தி, எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அறிவித்தது. இந்த புதிய விலை நிர்ணயத்தின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.16-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.101.72 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.102.48 ஆகவும், ரூ.91.77 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் ரூ.92.53 ஆகவும் உயர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரேநாளில் பெட்ரோல், டீசல் விலை 76 காசு உயர்த்தப்பட்டதால், ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. கடந்த 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் ரூ.917 ஆகவும், சேலத்தில் ரூ.933.50 ஆகவும் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.106 அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலையும் திடீரென நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தை பொறுத்தவரை ஒரு சிலிண்டர் விலை ரூ.983.50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 5 கிலோ கொண்ட மினி சிலிண்டர் ரூ.361க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.8.50 குறைந்துள்ளது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று திடீரென ரூ.50 விலை உயர்த்தப்பட்டு, சிலிண்டர் ரூ.1,000ஐ நெருங்கியுள்ளதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். ஒரேநாளில், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், விலைவாசி உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.* கொடைக்கானலில் 105.78 காசாக உயர்வுமலைப்பிரதேசம் என்பதால், கொடைக்கானலில் பெட்ரோல் விலை சற்று அதிகமாகவே இருக்கும். நேற்று முன்தினம் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.32க்கு விற்பனையானது. நேற்று 75 காசுகள் அதிகரித்து, ரூ.105.07க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.107.78க்கு விற்பனையானது. அதேபோல் டீசல், நேற்று லிட்டருக்கு ரூ.2.39 அதிகரித்து ரூ.94.73க்கு விற்பனையானது.சமையல் காஸ்சென்னை    ரூ.965.50மும்பை    ரூ.949.50டெல்லி    ரூ.949.50கொல்கத்தா    ரூ.976.00பெட்ரோல், டீசல் விலைநகரம்    பெட்ரோல்    டீசல்சென்னை    ரூ.102.16    ரூ.92.19டெல்லி    ரூ.96.21    ரூ.87.47மும்பை    ரூ.110.82    ரூ.95கொல்கத்தா    ரூ.105.51    ரூ.90.62…

The post 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.50 அதிகரிப்பு: ரூ.1,000ஐ நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி; 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Uttar Pradesh, ,Punjab ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...