×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நள்ளிரவில் கணவன் சரமாரி வெட்டி கொலை

* சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் கைது * மனைவியிடம் விசாரணைகுன்றத்தூர்: மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (35).  சொந்தமாக லோடு ஆட்டோ வாடகைக்கு ஓட்டிவந்தார். இவரது மனைவி காமாட்சி (27). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். செல்வராஜின் நண்பர் வெற்றி (25). அப்பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சவுண்ட் சர்வீஸ், கொடி அலங்காரம் செய்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் செல்வராஜை, செல்போனில் வெற்றி தொடர்பு கொண்டார். அப்போது உங்களது லோடு ஆட்டோ தீ பற்றி எரிகிறது என கூறியுள்ளார். இதை கேட்டு அவர், வெளியே வந்தபோது, அங்கு வெற்றி நின்றிருந்தார். அவருடன் ஆட்டோ அருகே சென்றார். அப்போது, தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெற்றி சென்றார்.அந்த நேரத்தில் அங்கு வந்த 4 பேர், செல்வராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து  மர்மநபர்கள் தப்பி சென்றனர். பின்னர், அங்கு வந்த வெற்றி, ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வராஜை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு செல்வராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், ஆட்டோவில் தீப்பற்றி எரிந்ததை வைத்து, வெற்றியிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், செல்வராஜ் வீட்டுக்கு, வெற்றி அடிக்கடி செல்வது வழக்கம். அதில் அவரது மனைவி காமாட்சியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்தனர். இதையறிந்த செல்வராஜ், மனைவியை கண்டித்துள்ளார். இதுபற்றி காமாட்சி, வெற்றியிடம் கூறியுள்ளார். இதனால் நண்பர்கள் இடையே பகை உருவானது. இதையடுத்து அவர்கள், செல்வராஜை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.இதைதொடர்ந்து, நண்பர்கள் மூலம் செல்வராஜின் ஆட்டோ பேட்டரியில் நள்ளிரவில் தீ வைத்துவிட்டு, ஆட்டோ எரிவதாக வெற்றி செல்போனில் கூறியுள்ளார். அதை நம்பி வந்த செல்வராஜை, நண்பர்களை வைத்து வெட்டி கொலை செய்தார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். மேலும், செல்வராஜின் மனைவிக்கும், வெற்றிக்கும்  கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், கணவரை கொலை செய்யும்படி  காமாட்சியே வெற்றியிடம் கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதால், காமாட்சியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார், தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நள்ளிரவில் கணவன் சரமாரி வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Lower Ragunathapuram ,Bajana Temple Street ,
× RELATED பூந்தமல்லியில் இந்து அமைப்பு மாநில...