×

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலக்கலான காமெடிப்படமாக வெளிவந்த திரைப்படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது. நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு தீபக் குமார் மற்றும் படத்தொகுப்பு என் பி ஶ்ரீகாந்த் கையாண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ஜி5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ஜி5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது.

குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. “டிடி ரிட்டர்ன்ஸ்” 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் “டிடி ரிட்டர்ன்ஸ்” படத்தில் வருவது போன்ற செட் அமைத்து ஸ்கேரி ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெறும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

The post ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : ZEE5 ,C Ramesh Kumar ,K Entertainment ,Sandanam ,Prem Anand ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நீண்ட இடைவேளைக்குப் பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்