×

தற்கொலை செய்துகொள்ளாதீர்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: நேற்று, உலக தற்கொலை தடுப்பு தினமாகும். இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:‘மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பது இல்லை’ என்ற ப.சிங்காரத்தின் வரிகளை துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூட தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள்.

‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து, உங்கள் வாழ்வுக்கு அர்த்தமும், அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள். ‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார், தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று, உலக தற்கொலை தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்.

 

The post தற்கொலை செய்துகொள்ளாதீர்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Chennai ,World Suicide Prevention Day ,People's Justice Center ,P.Singhara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த...