×

திருமணம் பற்றி யோசிக்கவில்லை: அனுஷ்கா

ஐதராபாத்: பல்வேறு மொழிகளிலுள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் அனுஷ்கா, திடீரென்று உடல் எடை கூடினார். இதனால், அவருக்கு புதுப்பட வாய்ப்பு கள் குறைந்தது. இதை அவர் அறிந்து அதிர்ச்சி அடைந்து கடுமையான உடற்பயிற்சி செய்து, டயட் கடைபிடித்து உடல் எடையைக் குறைத்துள்ளார். தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து அடிக்கடி தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது: ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பாகமதி’ என்ற படத்தில் நான் நடித்தாக வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு எனக்கு கட்டாய ஓய்வு தேவைப்பட்டது. எனவே, சில காலங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

இனி நான் நடிக்க வேண்டிய புதுப்படங்களுக்கு என்னை மனரீதியாக தயார் படுத்திக்கொள்ள இடைவெளி தேவைப்பட்டது. இதை எனது நலம்விரும்பிகளும், பெற்றோரும் சொன்னபோது, அது உண்மை என்று உணர்ந்தேன். எனவேதான் சில காலம் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டேன். தற்போது வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் வெற்றி எனக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன். அதற்காக நிறைய கதைகள் கேட்கிறேன். எனக்கு மிகப் பொருத்தமான கதையும், கேரக்டரும் அமைந்தால், எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன். தற்போது என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அது நடக்கும்போது நடக்கட்டும்.

 

The post திருமணம் பற்றி யோசிக்கவில்லை: அனுஷ்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anushka ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி