×

கோடை வெயிலை சமாளிக்க கோவை வ.உ.சி. பூங்காவில் விலங்குகளுக்கு, ஷவர் மூலம் நீர் தெளிக்கும் பணி

கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை வ.உ.சி. பூங்காவில் விலங்குகளுக்கு, ஷவர் மூலம் நீர் தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்பு, ‘குளுகுளு’ நகரம் என பெயர் பெற்றது கோவை. ஆனால், சாலை விரிவாக்கம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தது.கடந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் அளவு, 50 டிகிரியை தாண்டியது. ஏப்ரல் துவங்கியதும், வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து, 100 டிகிரியை தாண்டியது.இதனால் மனிதர்கள் உட்பட பறவைகள், விலங்குகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில், வாத்து, புறா மற்றும் சாரஸ் கிரே, பெயிண்டர்ட் ஸ்டார்க், கிரே பெலிக்கன், ரோசி பெலிக்கன், ஈ மு  உள்ளிட்ட  பறவைகள் உள்ளன. இவை தவிர கடமான், குரங்குகள், ஒட்டகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பாம்புகளும் உள்ளன. இப்பறவைகள், விலங்குகள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. பறவைகளுக்காக கடந்த சில நாட்களாக வாட்டர் ஸ்பிரேயர் மூலமாக குளியல் நடத்தப்படுகிறது. காலை அல்லது மதியம் என ஒரு வேளை மட்டும் வாத்துக்களுக்கு நீர் குளியல் நடக்கிறது. கோடை வெயில் அதிகமானால், இரண்டு முறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாம்புகளுக்கும் பெரிய அளவிலான டப் வைத்து அதில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் பாம்புகள் வெயில் தாக்கத்தை தணித்து கொள்கின்றன.மேலும், பறவை, விலங்குகளுக்கான உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் பெறப்பட்டு வாத்து, மான், எலி, மயில் போன்றவற்றுக்கு அளிக்கப்படுகிறது. குரங்குகளுக்கு தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்றவை வழங்கப்படுகிறது.கடமான்களுக்கு பிரத்யேகமாக ஸ்பிரேயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரேயர் மூலம் அவற்றுக்கு நீர் தெளிக்கப்படுகின்றன. இதன் மூலம் அவை வெப்பதை தணித்துக் கொள்கின்றன. வெயிலின் தாக்கம் குறையும் வரை இந்நடைமுறை பின்பற்றப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்….

The post கோடை வெயிலை சமாளிக்க கோவை வ.உ.சி. பூங்காவில் விலங்குகளுக்கு, ஷவர் மூலம் நீர் தெளிக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Coimbatore V.U.C ,Coimbatore ,Coimbatore V.C. ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!