×

ராயபுரம் காவல் நிலையம் அருகே ஓடும் காரில் தீ

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (41). இவரது  காரில் பழுது ஏற்பட்டது. இதனால்  காரை பழுது பார்த்து வரும்படி டிரைவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அதன்படி நேற்று டிரைவர் காரை எடுத்துகொண்டு புறப்பட்டார். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அர்த்தன் ரோடு சாலை வழியாக சென்றுகொண்டு இருந்தபோது, காரின்  முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்ப்பதற்குள் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராயபுரம் தீயணைப்புத்துறை இணை அதிகாரி பரமேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் காவல்நிலையம் அருகே கார் தீப்பற்றி எரிந்த சம்பவம்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ராயபுரம் காவல் நிலையம் அருகே ஓடும் காரில் தீ appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Dandadarpet ,Subash ,Rayapuram, Chennai ,Rayapuram Policestation ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது