×

கவினுக்கு ஜோடியாகும் ஆதிதி, பிரீத்தி முகுந்தன்

சென்னை: ஸ்டார் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கவின், லிப்ட், டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகனாக உருவெடுத்தார். டாடா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின. அதன்படி, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் ஒப்பந்தமாகினார்.

இந்த படத்திற்கு ஸ்டார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது படத்தில் கவினுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இதுதொடர்பாக பேசிய இயக்குநர் இளன், படத்தில் இரண்டு நாயகிகள் தேவை என்பதால் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

The post கவினுக்கு ஜோடியாகும் ஆதிதி, பிரீத்தி முகுந்தன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi ,Preeti Mukhandan ,Chennai ,Kavin ,Tata ,Poet Aditi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முழுநேர முனைவர் பட்டப்படிப்பு...