×

25ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது வலிமை

சென்னை: அஜீத் நடித்துள்ள வலிமை படம் வருகிற 25ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. அஜித், கார்த்திகேயா, ஹீமா குரைஷி நடித்துள்ள வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார். கடந்த மாதம் 24ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் வெளிவந்தது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில், வருகிற 25ம் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்….

The post 25ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது வலிமை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mohamad ,Ajith ,Karthikeya ,Hema Qureshi ,OTT ,Dinakaran ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்