×

டெல்லியில் இருந்து தோகாவுக்கு சென்ற விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: தொழில்நுட்ப கோளாறு காரணம்

கராச்சி: கத்தார் ஏர்வேஸ்விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோகாவுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார்கோ அறையில் இருந்து புகை வந்ததால் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதனால் அருகாமையில் இருந்த கராச்சி விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சைபூர் ரஹ்மான் கூறுகையில்,‘‘கத்தார் ஏர்வேஸ் விமானம் டெல்லியில் இருந்து நேற்று காலை 3.20 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 5.30 மணிக்கு கராச்சி ஜின்னா விமான நிலையத்தில்  அவசரமாக  தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் 283 பேரும் வெளியேற்றப்பட்டு வேறு ஒரு விமானத்தில் தோகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோளாறு ஏற்பட்ட விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார். …

The post டெல்லியில் இருந்து தோகாவுக்கு சென்ற விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: தொழில்நுட்ப கோளாறு காரணம் appeared first on Dinakaran.

Tags : Bagh ,Delhi ,Toga ,Karachi ,Qatar Airways ,Doga ,Pak ,Dinakaran ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...