×

கண்ணாடி பெட்டிக்குள் யோகா: கும்மிடிப்பூண்டி மாணவி உலக சாதனை

கும்மிடிப்பூண்டி: யோகா செய்து தனியார் பள்ளி மாணவி உலக சாதனை புரிந்துள்ளார். கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் எம்.கே.லத்திகாஸ்ரீ(9). தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். 3 வயது முதலே யோகாவின் மீது நாட்டம் கொண்ட சிறுமி தென்னிந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளிலும், மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெற்றிபெற்றாள். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக சாதனை முயற்சியில் கண்ணாடி பெட்டிக்குள் `அந்தர் முகசகுனி கபடாசனத்தை’ 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாள். இதனால் உலக சாதனை படைத்த லத்திகாஸ்ரீ மற்றும் அவருக்கு பயிற்சியளித்த காலதீஷ்வரன், அர்ச்சனா, வித்யா ஆகியோரை அப்பகுதி மக்களும் பாராட்டினர்….

The post கண்ணாடி பெட்டிக்குள் யோகா: கும்மிடிப்பூண்டி மாணவி உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Kummitypoondi ,Gummaipundi ,Manikandan ,
× RELATED புகைபிடிக்க வேண்டாம் என கூறியதால்...