×

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது; தடுத்தவருக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: அயனாவரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் சர்ப்பினிஷா (45). இவரது கணவர் மதார்  (48). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக தம்பதி பிரிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற மதார், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன், மதாரை தடுத்துள்ளார். அவரையும் கை, தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சர்ப்பினிஷாவுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மதாரை கைது செய்தனர்….

The post குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது; தடுத்தவருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Perampur ,Ayanavaram Sabathi Street ,Sardinisha ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்