×

ஈரோடு அருகே நசியனூர் பேரூராட்சி அலுவலகம் முன் 2-வது நாளாக கிராம மக்கள் விடியவிடிய காத்திருப்பு போராட்டம்.!!

ஈரோடு: ஈரோடு அருகே குடியிருக்கும் வீடுகளுக்கு அங்கேயே பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி நசியனூர் பேரூராட்சி அலுவலகம் முன் பள்ளிபாளையம் கிராம மக்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் கிராமத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி 25 வீடுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் வீடுகளை அகற்றுவதற்கான நோட்டீஸை வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளிடம் வழங்கினர். ஆனால் அங்கே 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பதாக கூறி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளிபாளையம் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து நசியனூர் பேரூராட்சி அலுவலகம் முன் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், வின்னர் ஆர்ஜிஓ பிரேமலதா ஆகியோர் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் மக்கள் இரவும், அங்கேயே உணவாயு சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.          …

The post ஈரோடு அருகே நசியனூர் பேரூராட்சி அலுவலகம் முன் 2-வது நாளாக கிராம மக்கள் விடியவிடிய காத்திருப்பு போராட்டம்.!! appeared first on Dinakaran.

Tags : Nasianur Municipality ,Erode ,Nasianur ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...