×

அனுஷ்கா நடிக்கும் ‘காத்தனார்’

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா, 3 வருட இடைவெளிக்குப் பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 7ம் ேததி திரைக்கு வரும் இப்படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் உருவாகும் மந்திர தந்திர கதையில் அனுஷ்கா நடிக்கிறார். ‘காத்தனார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அமானுஷ்ய சக்திகள் கொண்டவர் என்று நம்பப்படும் கேரள பாதிரியாரான கடமடத்து காத்தனாரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் உருவாகிறது.

சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்பட 7 மொழிகளில் அடுத்த வருடம் வெளியாகிறது. இது மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் இந்திய திரைப்படம் என்று கூறப்படுகிறது.

The post அனுஷ்கா நடிக்கும் ‘காத்தனார்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anushka ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்