×

பாலிவுட் செல்லும் சிவராஜ் குமார்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதையடுத்து ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களின் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது சிவராஜ் குமாருக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கும் ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேரடி இந்தி படத்தில் சிவராஜ் குமார் அறிமுகமாகிறார். அதா சர்மா, சித்தி இத்னானி நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென், அடுத்து ‘பாஸ்டர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

The post பாலிவுட் செல்லும் சிவராஜ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shivraj Kumar ,Bollywood ,Rajinikanth ,Dhanush ,Priyanka Arul ,Arun Matheswaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில்...