×

விஜய் படத்தின் முதல் பாடல் எப்படி இருக்கும்? யுவன் சங்கர் ராஜா அப்டேட்

சென்னை: விஜய் நடித்துள்ள, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதை தொடந்து விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘விஜய் 68’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும், 3டி விஎஃப்எக்ஸ் டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். இந்நிலையில், ‘விஜய் 68’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யுவன் ‘விஜய் 68’ படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் படத்தின் முதல் பாடல் எப்படி இருக்கும்? யுவன் சங்கர் ராஜா அப்டேட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Yuvan Shankar ,Chennai ,Lokesh Kanagaraj ,Venkat Prabhu ,AGS ,Kalpathi S Agoram ,Yuvan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED துருக்கியில் தளபதி 68 படப்பிடிப்பு