×

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி குத்திக்கொலை

குன்றத்தூர்: சென்னை அருகே குன்றத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் ஒரு வாலிபர் ரத்தக்கறைகளுடன் அமர்ந்திருந்தார். போலீசார் விசாரணையில், அவர் தனது பெயர் ராஜா (38) என்றும், தனது கள்ளக்காதலியை கொலை செய்ததாக கூறினார். ராஜாவை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் உடைகள் கிழிந்த நிலையில் ஒரு பெண் அரை நிர்வாண கோலத்தில் கத்திக்குத்து காயங்களுடன்  இறந்துகிடப்பது தெரியவந்தது. சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தீவிர விசாரணையில், இறந்த பெண், குன்றத்தூர் அருகே ஜெகநாதபுரம், சேக்கிழார் நகரை சேர்ந்த கண்ணம்மா (50) எனத் தெரியவந்தது.இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்து, அதே பகுதியில் கல் அறுக்கும் நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில வருடங்களாக இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் கண்ணம்மா வீட்டுக்கு வந்த ராஜா, தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு கண்ணம்மா மறுக்கவே, அவரை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி சென்றபோது போலீசில் பிடிபட்டது தெரியவந்தது.இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் கண்ணம்மா கொலை செய்யப்பட்டாரா, இக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்….

The post ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Gunradhoor ,Chennai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...