×

டாஸ்மாக் கடையில் செல்போன் திருட்டு 2 பேர் கைது

செங்கல்பட்டு: சேலம் மாவட்டம் இடைப்பட்டி  கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவரது மகன் முத்துக்குமரன்(25) செங்கல்பட்டு அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று முன்தினம் செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு  வந்தார். அப்போது மர்ம நபர்கள்   அவரது  செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து விசாரித்தனர்.  அதில், அவர்கள் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் அசோக்பில்லர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பதும், இவர்கள்மீது  கொலை, கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவர்களை கைது  செய்த போலீசார்,  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …

The post டாஸ்மாக் கடையில் செல்போன் திருட்டு 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac shop ,Chengalpattu ,Adhapatti ,Salem district ,Muthikumaran ,Ammanampakkam ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...