×
Saravana Stores

எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி

சென்னை: திரைக்கு வந்த ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கியுள்ள படம், ‘ஜப்பான்’. இதில் கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் இது, கார்த்தி நடிக்கும் 25வது படமாகும். இந்த நிலையில், நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் வேடத்தில் நடிக்கும் அவர், சில ஹிட் படங்களில் எம்.ஜி.ஆர் ஏற்றிருந்த கெட்டப்பில் தோன்றுகிறார். முன்னதாக அதற்கான தனி போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. அந்த போட்டோக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்காலிகமாக ‘கார்த்தி 26’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராஜ்கிரண் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘வா வாத்தியாரே’ ஆகிய தலைப்புகளில் ஒரு தலைப்பு சூட்டப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

The post எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,MGR ,Chennai ,Raju Murugan ,Anu Emmanuel ,GV ,Prakash Kumar ,Diwali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ...