×

மேல்மலையனூர் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து-18 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சென்னையிலிருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்த 20 பேர் நேற்று சென்னையில் இருந்து வேன் மூலம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அருண்குமார் (26) என்பவர் ஓட்டிச் சென்றார்.திண்டிவனம் அடுத்த மேல்பேரடி குப்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது வேனின் வலதுபுற பின்பக்க டயர் வெடித்து நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராமதாஸ் மனைவி ரமணாம்பாள் (56), பக்தவச்சலம் மனைவி புஷ்பா (42), சுரேஷ் மனைவி லதா (46), கிருஷ்ணமூர்த்தி மகன் ஆனந்தன் (41), சங்கரன் மகன் சுரேஷ் (51), முனியம்மாள் (63), குமார் (34), விஜயலட்சுமி (43), சுமதி (54), எல்லம்மாள் (63), கல்யாணி (55), வனிதா (48), அரவிந்த் (29) உள்ளிட்ட 18 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு மூன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மேல்சிகிச்சைக்காக எல்லம்மாள், ரமணாம்பாள், புஷ்பா, லதா, ஆனந்தன் ஆகிய 5 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள மேல்பேரடி குப்பம் என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோசணை காவல் நிலைய போலீசார், பொதுமக்கள் உதவியுடன் வேனை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. சென்னையிலிருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post மேல்மலையனூர் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து-18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : elmailayanur ,Dindivanam ,Chennai ,Temple of Malayanur ,Sami Visionalur ,Melmelayanur Temple ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை: ராமதாஸ் பேட்டி