×

‘தெய்வமே… நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ வசனத்தால் புகழ்பெற்றவர்: நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர், ஆர்.எஸ்.சிவாஜி. கமல்ஹாசன் மற்றும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி, பல படங்களில் உதவி இயக்குனராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார். 1945ல் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘மீரா’ என்ற படத்தில் பணியாற்றிய நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் ஆர்.எஸ்.சிவாஜி. இவரது சகோதரர் சந்தானபாரதி
பிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

1980 முதல் 1990 வரை கமல்ஹாசனின் படங்களில் தொடர்ச்சியா காமெடி செய்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜிடம், ‘தெய்வமே… நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ என்று அடிக்கடி பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது. பிறகு நிறைய படங்களில் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி பலர் பேசி நடித்துள்ளனர். நயன்தாராவின் தந்தை வேடத்தில் ‘கோலமாவு கோகிலா’, விவேக்கின் உதவியாளராக ‘தாராள பிரபு’, சாய் பல்லவியின் தந்தையாக ‘கார்கி’ ஆகிய படங்களில் நடித்திருந்த ஆர்.எஸ்.சிவாஜி கடைசியாக நடித்த ‘லக்கி மேன்’ என்ற படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. இதில் அவர் யோகி பாபுவுக்கு கார் ஓட்ட பயிற்சி அளிப்பவராக நடித்திருந்தார்.

பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில், அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளுடனும் இணைந்து நடித்துள்ள அவர், டி.வி தொடர்கள் மற்றும் வெப்தொடர்களிலும் நடித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சென்னை யிலுள்ள தனது வீட்டில் நேற்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச்செய்தி அறிந்து கமல்ஹாசன் மற்றம் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். தவிர, தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் ெதரிவித்துள்ளது. ஆர்.எஸ்.சிவாஜியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

The post ‘தெய்வமே… நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ வசனத்தால் புகழ்பெற்றவர்: நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : RS Shivaji ,Chennai ,RS Sivaji ,R.S.Sivaji ,Kamal Haasan ,Rajkamal Films International ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...